திருமலையில் ஒரு மாதகாலத்தின் பின் வாகன இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்...
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் ஒரு மாதகாலத்தின் பின்னர் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கம் அடிப்படையில் இன்று முதல் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் 19 சிபேட்கோ எரிபொருள் நிலையங்களில் இன்று (21) திகதி முதல் வாகனங்களின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி இன்று திருகோணமலையின் 9 சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு பகலாக வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகிறது.
இதன்படி, இலக்கத் தகட்டின் இறுதி இலக்கங்களான 0, 1 மற்றும் 2 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் எனவும், 3, 4 மற்றும் 5 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாகன இலக்கத் தகட்டின் கடைசி எண்களான 6,7,8 மற்றும் 9 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்டத்திின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பதாாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறி்ப்பிடத்தக்கது.
மேலும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூபா 1500ம், முச்சக்கரவண்டிகளுக்கு ரூபா 2000 க்கும், கார்களுக்கு ரூபா 7000 க்கும் எரிபொருள் நிரப்பப்படுமென சில எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக காட்சிப்படுத்துப்பட்டுள்ளமையும் வாடிக்கையாளர்கள் நீீண் வரிசையில் காாத்திருந்து எரிபொருள் கொொள்வனவு செய்வதையும் அவதானிக்க முடிகின்றது.



