Header Ads

Breaking News
recent

ரணில் தனது அடாவடித்தனத்தை கருப்பு உடையணிந்த படைகளை வைத்து ஆரம்பித்துள்ளார் : அமைதி ஆர்ப்பாட்டத்தில் நடாத்தும் அடாவடித்தனத்தை உடன் நிறுத்த வேண்டும் : கிழக்கு மக்கள் ஒன்றியம்....



ரவ்பீக் பாயிஸ்
தமது உரிமைகளை கோரி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களை முற்றிலும் கண்டிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஜயந்த விஜேசகர தெரிவித்தார்


கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் குறித்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஜயந்த விஜேசகர.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் பிரதமரானபோது தடை இன்றி எரிபொருள் மற்றும் எரிவாயு என்பனவற்றை வழங்குவதாக உறுதியளித்திருந்தார், எனினும் தாம் ஜனாதிபதி ஆனந்தன் பின்னர் பொதுமக்களைப் பற்றி சிந்திக்காது தமது அரசியல் தந்திரோபாயங்களை பயன்படுத்தி அமைச்சுப் பதவிகளை வழங்கி தமது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்தார்

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முப்படையினரை பயன்படுத்திய அதேவேளை அவர்களுக்குள் கண்களை கட்டிக்கொண்டு கறுப்புநிற முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியவர்கள் யார் என கேள்வி எழுப்பினார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்ல ராஜபக்சக்களின் மறு உருவமே இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன் போராட்டத்த்தினை கைவிடாது தொடர்ச்சியாக முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
Powered by Blogger.