மீண்டும் முகக்கவசம் கட்டாயம்?
நாட்டில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் மீண்டும் முகக்கவசத்தை நடைமுறைப்படுத்துமாறு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின் கொரோனா தீவிரம் தணிந்திருந்த நிலையில், முகக் கவசம் அவசியமில்லை என சுகாதார அமைச்சு சுற்று நிருபம் வெளியிட்டு இருந்தது.
என்றாலும், கொரோனா எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால், நாட்டில் முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
BA. 5 என்ற புதிய கொரோனா வகை இன்று உலகத்தில் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. உலகில் நூற்றுக்கு முப்பது வீதம் இப்பொழுது அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஆகவே, இலங்கை மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதற்கு ஏதுவாக முகக் கவசங்களை மீண்டும் கட்டாயம் அணியுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டு உள்ளது.
