Header Ads

Breaking News
recent

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்பு...



மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தில் காளிகோவில் ஆலமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆண் ஒருவர் சடலமாக இன்று திங்கட்கிழமை (25) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

மகிழடித்தீவு பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குமாரசாமி திலகேஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குடும்ப பிரச்சனை காரணமாக சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய கிணற்றில் குதித்த நிலையில் அங்கிருந்து காப்பாற்றப்பட்டர்

இதனை தொடர்ந்து குறித்த நபரின் மனைவியார் இன்று அதிகாலை ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல எழுந்து கணவரை தேடிய போது அவரை வீட்டில் காணவில்லை எனவே அவர் அருகில் சென்றிருக்கலாம் என நினைத்து அவர் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் 8.30 மணிக்கு அந்த பகுதியிலுள்ள காளிகோவில் மூலஸ்தானப்பகுதியிலுள்ள ஆலமரத்தில் தூக்கில் தொங்கி; தற்கொலை செய்து கொண்ட நிலையில் காலை அங்கிருந்த சடலமாக மீட்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிசோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.