Header Ads

Breaking News
recent

கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுமா?



நாளை (25) முதல் நாடு முழுவதும் அரச மற்றும் அரை அரச பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன.

அரசாங்கத்தின் அறிவிப்பின்படி வாரம் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகளில் இடம்பெறும்.

எவ்வாறாயினும் தென் மாகாணத்தில் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும் என மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் வாரம் ஐந்து நாட்கள் பாடசாலைகள் இடம்பெறும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் இதனை முற்றாக நிராகரித்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், அரசாங்கத்தின் அறிவிப்பின்படி வாரம் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலை நடைபெறும் எனவும் மீதம் இரண்டு நாட்களும் ஒன்லைன் மூலம் வகுப்புகள் இடம்பெறும் எனவும் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார்.
Powered by Blogger.