Header Ads

Breaking News
recent

கடலில் ஊடுருவிய மர்ம படகு : தீவிர விசாரணை


தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் படகொன்று மீட்கப்பட்டுள்ளது.

காற்று அடித்து பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த படகுக்கு அருகில் இருந்து சுழியோடிகள் பாவிக்கும் காலணி, படகுக்கு காற்று நிரப்பும் பம் , ஜாக்கெட் , கண்ணாடிகள் , 18இற்கும் மேற்பட்ட தண்ணீர் போத்தல்கள் , மிதக்கும் பைகள் என படகுக்கு அருகில் இருந்து சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து சிலர் இந்தப் படகின் மூலம் தமிழகத்தினுள் ஊடுருவி இருக்கலாம் என தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் , கடலோர பாதுகாப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Powered by Blogger.