Header Ads

Breaking News
recent

உங்களிடம் டொலர் உள்ளதா? எரிபொருள் கொள்வனவுக்கு அனுமதி...



அமெரிக்க டொலருக்கு எரிபொருளை கொள்வனவு செய்யக்கூடிய வாடிக்கையாளர்களை பதிவு செய்ய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வர்த்தகத்தை உடைய தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் இதன் கீழ் பயன்பெற முடியும்.

அவர்கள் நேரடியாக டொலரை கொடுத்து அவர்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியும்.

குறைந்தபட்சம் 6,600 லிட்டர் எரிபொருள் ஒரு தடவையில் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்பதோடு 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதற்கான பதிவுனை கீழே தரப்பட்டுள்ள இணையதளத்தில் சென்று மேற்கொள்ள முடியும்.




Powered by Blogger.