Header Ads

Breaking News
recent

இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு...



கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றுள்ளனர்.


பிக்குகள், சர்வமத தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஓல்கோட் மாவத்தையினுள் நுழைவதை தடுக்கும் வகையில் மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் தங்கியிருந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது.


புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு கொழும்பு நீதவான் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்
Powered by Blogger.