திருமலை ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான ஏற்பாடு : திருமலை ஊடகவியலாளர் சங்கம்...
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை ஊடகவியலாளர்களுக்கு எரிபொருளை பெறுவதற்கான ஏற்பாடுகளை திருவோணமலை ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் அரசினால் விசேடமாக அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்குமாறு விசேட வர்த்தமானி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த வருத்தமானியில் ஊடகத்துறையினை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்கப்படாமையினால் நாட்டில் பெரும்பாலான பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பின் போது எரிபொருள் இன்றி பெரிதும் சிரமப்பட்டு வருகின்ற இந்த நிலையில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் திருகோணமலை ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மங்கள லியனாரச்சி அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் எரிபொருள் கொள்வனவிற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்காமல் எரிபொருளை கொள்வனவு செய்யக்கூடிய ஏற்பாடுகள் திருகோணமலை ஐ.ஒ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதன் முதல் கட்டமாக திருகோணமலையின் ஐந்து ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் தமது எரிபொருளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


