Header Ads

Breaking News
recent

நாளை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் : திருகோணமலையில் அமைக்கப்பட்ட வீதி தடைகள்...



அப்துல்சலாம் யாசீம்,ரவ்பீக் பாயிஸ் 

நாளை அரசுக்கு எதிராக இடம்பெற இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு திருகோணமலை-நகரை அண்மித்த பகுதியில் முப்படையினர் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் அபயபுர சந்தி, மூன்றாம் கட்டை, தபால் கந்தோர் சந்தி மற்றும் அதிகளவில் மக்கள் நடமாடும் இடங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

கொழும்பில் நாளை (09)  திகதி நடைபெற இருக்கின்ற எதிர்ப்பு பேரணியை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை முற்றுகையிட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது நிலையில்.

திருகோணமலையில் அவசரமாக பாதுகாப்பு  பலப்படுத்துவதன் நோக்கம் கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற எதிர்ப்பின் போது பல அரசியல் புள்ளிகள் பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமிற்கு தஞ்சமடைந்த நிலையில் 

இதேபோன்று நாளை நடைபெற உள்ள எதிர்ப்பின் போது மீண்டும் அரசியல் புள்ளிகளை பாதுகாக்கும் நோக்கில் திருகோணமலைக்கு அழைத்து வரலாம் என்ற எதிர்பார்ப்பில் இவ்வாறான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் மக்கள் விசனம் தெரிவிப்பதுடன்

திருகோணமலை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நாளைய தினம் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையாக குறித்த விதி தடைகள் போடப்பட்டுள்ளதாகவும் புத்திஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர். 







Powered by Blogger.