குரங்கு காய்ச்சல் வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை...
குரங்கு காய்ச்சல் வைரஸ் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார திணைக்களங்கள் ஏற்கனவே தீவிர கவனம் செலுத்தி வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இலங்கையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரும் இதுவரையில் பதிவாகவில்லை.
அவ்வாறு நோயாளர்கள் பதிவாகும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேவையான வசதிகளை சுகாதார அமைச்சு ஏற்கனவே தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
