திருமலையில் குடிநீர் தொகுதி கையளிப்பு...
திருமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை கரடிப்பூவல் கிராமத்தில் மக்கள் பாவனைக்காக குடிநீர் தொகுதி கையளிக்கப்பட்டது
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட குடாக்கரை பகுதில் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் மூலம் விநியோகிக்கப்படுகின்ற நீர் விநியோகம் அனைத்து குடும்பங்களுக்கும் வேகமாக வருவது இல்லை என்றும் தினந்தோறும் நீர் விநியோகம் விநியோகிக்கப்படுவதில்லை என்றும் பிரதேச மக்களினால் முன்வைைைக்கப்பட்டகுறைப்பாட்டிற்க்கு திருகோணமலை பட்்டினமும் சூழலும் பிரதேச சபை உபதவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களின் தலைையீட்டால் குறித்த பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டது.
இதற்கான நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்கும் ஒரு அங்கமாக குடாக்கரை பிரதேசத்தில் கரடிப்பூவல் கிராமத்தில் அன்நூரி நிறுவனத்தின் அனுசரணையுடன் ஆழ்துளை குழாய்்கள் கிணறு அமைத்து குடிநீர் தொகுதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் அப்பகுதி முக்கியஸ்தர்கள்
அன்நூரி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்,
பொதுமக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.








