Header Ads

Breaking News
recent

ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிமன் கண்டுபிடித்த 'ஹைபிரிட் சைக்கிள்...



யாழ்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று அறிமுகம் செய்துள்ளார்.




துவிச்சக்கர வண்டியில் மோட்டார் பொருத்தியும், மீள் சுழற்சி பொருட்களை பயன்படுத்தியும் அதனை கண்டு பிடித்துள்ளார்.




இன்றைய தினம் குறித்த கலப்பு துவிச்சக்கர வண்டி அறிமுக விழா இளம் புத்தாக்குநர் கழக இராஜ அரவிந்தன் தலைமையில் ஹாட்லிக் கல்லூரி ஆய்வுகூட மண்டபத்தில் இடம் பெற்றது.




இதில் பாடசாலை அதிபர் தம்பையா கலைச்செல்வன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறிமுகம் செய்து வைத்தார்.




இதில் பாடசாலை உப அதிபர் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறான கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.




Powered by Blogger.