Header Ads

Breaking News
recent

திருமலையில் ஆறு மாத சிசுவை கொலை செய்த தாய் கைது...

 


ரவ்பீக் பாயிஸ் 

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பிரதேசத்தில் ஆறு மாத சிசுவை கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்றைய தினம் திருகோணமலை சீனக்குடா சின்னம்பிள்ளை சேனை பிரதேசத்தில் தகாத உறவினால் கருவுற்ற தாய் ஒருவர் தனது 6 மாத சிசுவை பிரசிபித்து கொலை செய்த குற்றச்சாட்டின் பெயரிலே சீனகுடா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர்ரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.