திருமலையில் சட்டவிரோதமான முறையில் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் 30 லீட்டர் பெட்ரோலுடன் கைது...
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டி டி ஏ சந்தி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் பெட்ரோல் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
சீனக்குடா பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு சேமித்து வைக்கப்பட்ட 30 லீட்டர் பெட்ரோலுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் டிடிஏ சந்தி பிரதேசத்தை சேர்ந்த பி.லியனாரச்சி (வயது-52) என்பவர் எனவும் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)