கூட்டுறவு அபிவிருத்தி நிதியத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு...
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் கூட்டுறவு அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் இலிங்கநகர்,மட்கோ மற்றும் பூம்புகார் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 25 குடும்பங்களின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு திருகோணமலை மட்கோ முதியோர் சங்க கட்டடத் தொகுதியில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி லோஜினி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை தட்ச்சாயினி ஆம்ஸ்ட்ரான் சியாகோ தனியார் நிறுவனம் மற்றும் சுவடுகள் அமைப்பின் நிதி உதவியின் கீழ் கூட்டுறவு அபிவிருத்தி நிதியத்தின் வழிகாட்டலில் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் ஆர்.எம் தம்மிக்க ராஜபக்ச,செயலாளர் எம்.எம்.வசந்த லங்காதிலக,பொருளாளர் அனுராதா சினவிரத்ன,மாவட்ட திட்டமிடல் உத்தியோகத்தர் லலித் கரன் திலக்க தேசிய அமைப்பாளர் லொகின் பரமேஸ்வரன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் தவராஜசேகரம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







