Header Ads

Breaking News
recent

குடாக்கரை பிரதேசத்தில் முதன் முதலாக சிங்கள பயிற்சி பாடநெறி சான்றிதழ் வழங்கும் வைபவம்...



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக கிராமியப் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனம் (ரெக்டோ) அனுசரணையுடன் குடாக்கரை பிரதேசத்தில் முதல் முறையாக இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி பாடநெறி நடைபெற்று சான்றிதழ் வழங்கும் வைபவம் திருகோணமலை வெள்ளைமணல் அல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் ரெக்டோ நிறுவனத்தின் தலைவர் மதிப்புக்குரிய ஜெ.எம் அசார் ஆசிரியர் அவர்களுக்கு அவர்களுடைய ரெக்டோ நிறுவனத்தின் மூலம் செய்து வருகின்ற பல்வேறுபட்ட சமூக நலன் திட்டங்களை பாராட்டி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ரெக்டோ நிறுவனத்தின் தலைவர் அசார் ஆசிரியர் உரையாற்றும் போது
திருகோணமலை மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களை மொழித்திறன் மிக்கவர்களக மாற்றும் நோக்குடன் இரண்டாம் மொழி தமிழ் மற்றும் சுமார் 10 சிங்கள பயிற்சி பாடநெறிகள் ஆரம்பித்ததாகவும் அதில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற்ற இரண்டு பாடநெறிகளும் நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு இன்னும் பல துறைகளில் முன்னேற்றம் கண்டு வெற்றி பெற வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் விருந்தினர்களாக
திருகோணமலை அல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஏ.எம் அமீன், மூதூர் பிரதேச சபை உறுப்பினரும்,ரெக்டோ நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளருமான ஏ.எஸ்.எம் தாணிஸ் உட்பட ரெக்டோ நிறுவனத்தின் பொருளாளர் எஸ். நஹீம், மற்றும் சிங்கள பயிற்சி பாடநெறி வளவாளர் சுதர்சினி அமரசூரிய மற்றும் மாணவர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இன் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பல நடைபெற்றது இன் நிகழ்வினை இளம் சமூக சேவையாளர் ஐ. இம்ரான் அவர்கள் தொகுத்து வழங்கிமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.