தேசிய ரீதியில் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் திருமலை மெதடிஸ்த உயர்தர பெண்கள் கல்லூரி சாதனை...
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மெதடிஸ்த உயர்தர பெண்கள் கல்லூரி தேசிய ரீதியில் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் சாதனை படைத்துள்ளது.
பாடசாலைகளுக்கு இடையேயும் அரச திணைக்களங்களுக்கு இடையேயும் தனித்தனியாக நடாத்தப்பட்ட 2020 ம் ஆண்டிற்குரிய தேசிய உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில் உயர்தர பாடசாலை மட்டத்தில் திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி இவ் விசேட விருதினைப் பெற்றுள்ளது.
இப் போட்டியானது கல்வி முகாமைத்துவம், பௌதிக வளம், நேர முகாமைத்துவம் உட்பட பல விசேட விடயங்கள், பரசீலிக்கப்பட்டு, பார்வையிடப்பட்டு விசேட விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இவ் விருதினை அதிபர் திருமதி. S. ஜோன் தேவதாஸ் தலைமையில், மெதடிஸ்த பெண்கள் கல்லூரி பெற்றுள்ளமை திருகோணமலை மாவட்டத்திற்கும், கல்லூரிச் சமூகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இவ் வெற்றிக்கு காரணமான அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் போன்றவர்களின் பங்களிப்பு அளப்பெரியது. குறித்த கல்லூரி மென் மேலும் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வாழ்த்துகளை தெரிவிப்பதாக திருகோணமலை நலன்விரும்பிகள் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
