மேய்ச்சல் நிலங்கள் இன்மையால் கால்நடை பராமரிப்பதில் சிக்கல் - மாற்றீடுகளை கையாள இம்ரான் எம்.பி கோரிக்கை.
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மாவட்டத்தில் அடுத்த போகத்திற்கான வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் மேய்ச்சல் தரை இன்மையினால் கிண்ணியா பிரதேசத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான கால்நடைகளை பராமரிப்பதில் பண்ணையாளர்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை காலத்தில் கால்நடைகளை பராமரிப்பது தொடர்பில் இன்று திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன் அவர்களுடன் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்
கடந்த காலங்களில் போன்று கந்தளாய் சீனி தொழிற்சாலை வளாகத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகளை கொண்டுசெல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியா பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்.
தற்காலிகமாக கால்நடை மேய்ச்சலுக்காக 4 மாதங்களுக்கு கந்தளாய் சீனி தொழிற்சாலை வளாகத்தில் கிண்ணியா பிரதேச கால்நடைகளை வைத்து பராமரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன் அவர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும் குறித்த சந்திப்பில்
கால்நடை சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
