திருமலை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சினேகபூர்வ சந்திப்பு.
ரவ்பீக் பாயிஸ்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமிடையில் சிநேகபூர்வமான சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் திருகோணமலைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (14) பிற்பகல் திருகோணமலை பிரதான கடற்கரையினை பார்வையிட்ட போது குறித்த சந்திப்பு இடம் பெற்றது.
இதன்போது திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பின் போது எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பிலும் திருகோணமலை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கான நிரந்தர மையம் ஒன்று இல்லாமையும் ஏனைய மாவட்டங்களில் நிரந்தர காணி அற்ற ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்ட காணி மற்றும் வீடமைப்பு திட்டம் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இதுவரை வழங்கப்படாமையையும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் முஸ்லீம் மீடியா போரத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அப்துல் சலாம் யாஸீம் அவர்களினால் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் குறித்த ஜனாதிபதியுடனான சிநேகபூர்வ சந்திப்பில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமையும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குழுவொன்றை அமைத்து ஆராய்ந்து சாதகமான பதில் ஒன்றை வழங்குவதாக தெரிவித்தார்.
குறித்த ஜனாதிபதியின் விஜயத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,ஜனாதிபதியின் பணிபுழாத்தின் பிரத்தாணி சகள ரத்நாயக்க,இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டு திருகோணமலை பிரதான கடற்கரையினை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)