Header Ads

Breaking News
recent

மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்தும் 06 மாவட்டங்களில் இணைந்தும் களத்தில் !

(அப்துல்சலாம் யாசீம்) 

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் இணைந்தும் களமிறங்குகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதுடன்வன்னிமட்டக்களப்புதிருகோணமலைகுருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும்புத்தளம் மாவட்டத்தில் பொதுக் கூட்டமைப்பின் கீழ்தராசு சின்னத்திலும் ஒட்டுமொத்தமாக 07 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.

வன்னி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முதன்மை வேட்பாளராகவும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முதன்மை வேட்பாளராகவும்திருமலை மாவட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் முதன்மை வேட்பாளராகவும்அம்பாரை மாவட்டத்தில் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.
Powered by Blogger.