மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 42 பேர் கைது !!!!

மட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தினை மீறி நடந்த 42 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று சட்டத்திற்கு முரணாக வீதிகளில் நடமாடியவர்களே பொலிஸாரினால் பிடிக்கப்பட்டுள்ளனர் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 42 பேர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கொக்கட்டிச்சோலை பகுதியில் மதுபானம்-கசிப்புடன் சென்ற 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.