Header Ads

Breaking News
recent

ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிப்பு !



கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரை தொடந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்று முன்னர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டமானது நாளைக் காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டமானது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களின் நலனை கருத்திற் கொண்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.
இதற்கமைய, மேற்கொள்ளப்ட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை பொறுப்புடன் ஏற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன், களுத்தறை மாவட்டத்தின் அடலோகம மற்றும் கண்டி மாவட்டத்தின் அக்குரனை பகுதிகள் என்பன முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.