கொரோனா பற்றிய கவலையின்றி தொடர் ஏவுகணை பரிசோதனையில் வடகொரியா!

வடகொரியா, கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை இன்று சோதனை செய்தது.
உலகமே கொரோனா வைரஸை எதிர்த்து தீவிராமாக போராடி வரும் நிலையில் வடகொரியாவின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என அதன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென்கொரிய கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரியா இணை படைத்தளபதி கூறியதாவது...
"வடகொரியாவின் வோன்சான் கடற்கரையில் இருந்து, குறுகிய தொலைவு சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டன. இந்த ஏவுகணை 230 கி.மீ தெலைவுக்கு 30கி.மீ உயரத்தில் சென்றது. உலக நாடுகள், கோவிட்-19 வைரஸால் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் சூழலில், வடகொரியாவின் இந்த நடவடிக்கை முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது" என தெரிவித்தார்.

வட கொரிய ஏவுகணை, தங்கள் பகுதியில் விழவில்லை என தெரிவித்துள்ள ஜப்பான் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளார்.