கொரோனா சாதாரண வைரஸ் போன்றதுதான் : இது உலக நாடுகளின் சதி !!
தயவு செய்து பொறுமையுடன் முழமையாக வாசியுங்கள்.....👇👇👇👇👇👇👇👇👇
#குழப்பம்_1 :- கொரோனா நோய்த் தாக்கம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. பயப்படவேண்டாம். இது சாதாரண தடிமன், காய்ச்சல் போன்றது தான். அச்சப்படாதீர்கள்! என்று சொல்கிற நீங்களே.....! ஏன் மக்களை தனிமைப்படுமாறும், வீட்டிலேயே இருந்து கொள்ளுமாறும் அடிக்கடி அறிவுறுத்துகிறீர்கள்? இது பெரும் முரண்பாடாக இருக்கிறதே டாக்டர்..!
#குழப்பம்_2 :- சாதாரண தடிமன், காய்ச்சலுக்கு ஏன் நாங்கள் பள்ளிகளில் தொழுகையை நிறுத்த வேண்டும்? ஏன் பொதுப்போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்? ஏன் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்? இவைகள் இலுமினாட்டிகளின் சதி தானே!
7 COVID19- Pandemic வைரஸ் தொற்றினை 7 படி முறைகளில் நோக்கலாம்.
இலங்கையில் இரண்டாம்/ மூன்றாம் நிலைகளுக்கு இடையில் நாங்கள் இப்போது இருக்கிறோம். அதாவது வெளி நாட்டிலிருந்து காவிக் கொண்டு வரப்பட்ட தொற்று இப்போது உள்ளூர் வாசிகளுக்கிடையில் பரவத் தொடங்கியிருக்கிறது. இட்ஸ் அலார்மிங்..
#விளக்கம்_1- பாண்டீமிக் -நாடோடி கொள்ளை* நோயின் நான்கு நிலைகள்(Stages) காணப்படுகின்றன.

முதல் நிலை: கொள்ளை நோய் பரவும் இடங்களில் இருந்து இறக்குமதியாகும் நோய் தொற்றாளர்கள் மூலம் ஒரு தொற்றுநோய் நாட்டுக்குள் பிரவேசித்தல். அஃதாவது இத்தாலியிலிருந்து, சீனாவிலிருந்து நமது நாட்டிற்குள் இந்நோயை காவி வருதல். இந்த நிலையை துரதிர்ஷ்டவசமாக நாம் எப்போதோ கடந்து விட்டோம்.😭
இரண்டாம் நிலையில் அவ்வாறு இறக்குமதியான நோயாளர்களிடமிருந்து உள் நாட்டில் இருப்பவர்களுக்கு நோய் பரவுதல். இப்போது வரை நமது நாடு இருக்கும் நிலை.
ஆனால், மூன்றாம் நிலை கொஞ்சம் பயங்கரமானது. இதில் நாட்டிற்கு உள்ளேயே யாரிடம் இருந்து யாருக்கு இந்த நோய் பரவுகிறது என்ற சங்கிலித்தொடரை (contact tracing) அறியமுடியாமல் இந்த தொற்று பரவுவது. ஓரிரு நாட்களில் அல்லது ஓரிரு வாரங்களில் நமது நாடு இந்த நிலையை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லோருக்கும் பொதுவான இறைவன் இந்த நிலை வராமல் நம்மை காத்தருளட்டும். ஆமீன்.
நான்காம் நிலை : மிக மிகப் பயங்கரமானது - இந்த கொரோனா மிகப்பெரும் அச்சுறுத்தும் கொள்ளை நோயாக உருவெடுத்து பேயாட்டம் போடத் தொடங்குவது. இதற்கு முன் வரலாற்றில் நிகழ்ந்த #ஸ்பானிஷ் ப்ளூ #Spanishflu இதற்கு நல்லதோர் உதாரணம். இந்நிலையில் ஆயிரக்கணக்கில் மரணங்கள் நிகழ்வது சர்வசாதாரணமாக நடக்கும். இது தான் இப்போது இத்தாலி, ஈரான், ஸ்பைன் போன்ற நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலை நமக்கு வராமலும் ஏக இறைவன் துணை புரியட்டும்.
நாம் இந்த இரண்டாம் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுப்பதற்காக வேண்டித்தான் மக்களை தனிமைப்படுமாறும், கைகளைக் கழுவிக் கொள்ளுமாறும், நடமாட்டங்களை குறைத்துக்கொள்ளுமாறும் அரசாங்கங்கள் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால் தற்போது கிடைக்கப் பெறும் விஞ்ஞான தரவுகளின் அடிப்படையில் அதையும் விட, இந்த கோவிட் 19ன் நோய் பரம்பரலை தடுத்து நிறுத்துவது மிகக் கட்டாயம் என்பதற்கு மேலதிகமாக இன்னும் 7 விஷேட காரணங்கள் இருக்கின்றன. அவை இந்த கொரோனா வைரசுக்கே சிறப்பான காரணங்கள். நமது ஆருயிரை ஓருயிரை காப்பாற்றுவதுவதற்கான காரணங்கள். மேலுள்ள அந்த பாடலை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள் எல்லாம் பொருந்தி வரும். சர்வமும் சமனாகிவிடும்.
#விளக்குதல்_2.
கொரோனா நோய் குறித்தும், அதன் தடுப்பு குறித்தும் அடிக்கடி எழுதுவதற்கும் பேசுவதற்கும் முதலாவது காரணம்; இந்த வைரஸ் நமக்கு புதியது என்பது தான். அதன் காரணமாக இதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி நம் யாருடைய உடம்பிலும் அறவே இல்லை. இந்த வைரஸை எதிர்கொள்வதற்கான ஆயுதங்கள் (innate immunity or acquired immunity) எதுவும் இன்னும் நம்மிடம் இல்லை. இது போராட்டக் களத்தில் யுத்தம் ஒன்றுக்கு பயிற்சி பெறாத ராணுவ வீரரை முன்னணியில் Front line நிறுத்தி போராடுவது போன்றது. கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமமானது.
ஒன்றை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் மற்றைய வைரஸ்களுக்கு; குறிப்பாக இருமல், தடிமன், சளி ஏற்படுத்துகின்றவைளுக்கு (இன்ஃபுளுவென்சா) நமது உடலில் எதிர்ப்பு சக்தி ஏற்கனவே இருக்கிறது. இதன் காரணமாகத்தான் சாதாரண தடிமன் இருமல் காரணமாக நாங்கள் இறந்து போகாமல் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறோம். நோய் தீவிரமடையாமல் பாதுகாக்கப்படுகிறோம். அந்த யுத்தத்தில் வெற்றியும் கண்டு வருகிறோம். இதே ஸேம் காரணம் தான் குறிப்பாக வயது வந்தவர்களில் இந்த கொவிட்19 நோயினால் இறப்பு விகிதம் கூடுதலாக இருப்பதற்கும் அடிப்படை காரணமாக இருக்கிறது. அதாவது குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி.
இரண்டாவது காரணம் COVID19 ஆனது மற்றைய வைரஸ்களை காட்டிலும் அதிகம் பரவக்கூடிய தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. அது போல இது நமது சுற்றுச்சூழலில் உள்ள மர தளபாடங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், ஆடைகள், போன்றவற்றில் குறைந்தது ஐந்து ஆறு மணித்தியாலங்களாவது உயிர் வாழும் தன்மையை கொண்டிருக்கிறது. அதன் காரணமாக இது கைகள் மூலம் பரவக்கூடியதாகவும் இருக்கிறது.
மூன்றாவது காரணம் இது அதிகம் தொற்றக் கூடியதாகவும் இருக்கிறது. ஏனைய இதன் குடும்ப வைரஸ்களை காட்டிலும் இதன் தொற்றுகை வீதம் மிக அதிகம். (இது குறித்து முன்னைய பதிவுகளில் விளக்கப்பட்டிருக்கிறது)
நான்காவது காரணம் இந்த நோய் காரணமாக ஏற்படும் இறப்பு வீதம் ஏனைய இன்புளுவன்சா வைரஸ்களை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. (இது குறித்தும் முன்னைய பதிவுகளில் விளக்கப்பட்டிருக்கிறது). இதனால் இந்த நோய் தொற்றிய 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 தொடக்கம் 30 வீதமானவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இருமல் தடிமன் போன்றது தான் இந்த கொவிட் 19 என்று சொல்பவர்கள் தடிமன் இருமல் காரணமாக இறந்த எத்தனை பேரை இதற்கு முன்னர் கண்டிருக்கிறார்கள்?

ஐந்தாவதுகாரணம், இந்த தொற்று நோய் வந்திருப்பவர்கள் தனக்கு இந்த நோய்த் தொற்று வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பே அதாவது நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு பல நாட்களுக்கு முன்பே தங்களை அறியாமலேயே இந்நோய் மற்றவர்களுக்கு பரப்பி விடக்கூடிய தன்மை இதிலே காணப்படுகிறது. இது ஒன்றே போதுமானது இந்த நோய் காட்டுத் தீ போல பரவுவதற்கு.
ஆறாவது காரணம் மிகவும் முக்கியமான காரணம் நமது வைத்தியசாலைகளில் உள்ள இடப்பற்றாக்குறை. நமது பிராந்தியத்தில் உள்ளே ICU கட்டில்களுக்கான தட்டுப்பாடு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒரு லட்சம் பேருக்கு 14 ஐசியு கட்டில்கள் வீதம் வைத்திருந்த இத்தாலியே இந்த கொரோனாவை கொன்றோல் பண்ண முடியாமல் தடுமாறிக் இருக்கிற போது ஒரு லட்சம் பேருக்கு வரும் 2 ICU கட்டில்களை வைத்திருக்கின்ற நமது நிலை அந்தோ பரிதாபம். இதுவரை வெளிவந்த டேட்டாக்களை வைத்து இந்த சின்ன உதாரணம். உங்கள் ஒவ்வொருவரு ஊரிலும் கிட்டத்தட்ட 10 000 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் அதில் 80 வீதமானவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த தொற்றியிலிருந்தது தப்பி விடுவார்கள். அதில் சிலவேளை நீங்களும், நானும் இருந்துவிடலாம். அப்படி இருக்க பிரார்த்திப்போம். ஆனாலும் மிகுதி 15 வீதமானவர்கள் கட்டாயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதாவது உங்கள் ஊரில்1500 பேருக்கு வைத்தியசாலை அனுமதி தேவைப்படும். இவ்வளவு பேரையும் அட்மிட் பண்ணக்கூடிய ஏதாவது ஒரு வைத்தியசாலை எங்காவது இருக்கிறதா? நமது எல்லா வைத்தியசாலைகளிலும் ஏற்கனவே ஆட்கள் நிரம்பி வழிகின்றனர். ஒரு கட்டிலில் இரண்டு, மூன்று பேர் என உட்கார்ந்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்ற அவலம் வேறு. அப்படியானால் இந்த ஆயிரத்தி ஐநூறு பேரை எங்கே கொண்டுபோய் வைப்பது? அது போல இன்னும் ஐந்து வீதமானவர்களுக்கு கட்டாயம் ஐசியு அட்மிஷன் தேவைப்படும். அதாவது 500 ஐசியு பெட்கள் தேவைப்படும். சாதாரணமாக ஒரு வைத்தியசாலையில் இருக்கின்ற ஐசியு பெட்களின் எண்ணிக்கை மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐந்து அல்லது பத்து. அவற்றுள் பெரும்பாலானவை ஏற்கனவே நோயாளிகளால் பாவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.(occupied/saturated). அப்படியானால் இந்த 500 பேரையும் எங்கே கொண்டுபோய் அட்மிட் பண்ணுவது. இந்த 500 பேரில் தான் நமது முதியவர்கள் தாய், தந்தை, உம்மம்மா, அப்பா போன்றவர்கள் இந்த 500ல் அடங்கி விடுவார்கள். இதுதான் இத்தாலியில் நடந்துவரும் பிரச்சினை, சீனாவை விட அதிகரித்த உயிரிழப்புகளுக்கும் காரணம். வளர்ச்சியடைந்த சுகாதார சேவைகள் மேம்பாடுடைய இத்தாலியால் கூட இந்த எண்ணிக்கையை சமாளிக்க முடியவில்லை என்றால் ஓரிரு ICU பெட்களையும் பாதி பழுதான வென்டிலேட்டர்களையும் வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் நமது வைத்தியசாலைகளில் நிலை எப்படி இருக்கும்?கற்பனை பண்ணவே முடியவில்லை. இப்பவே கண்ணைக் கட்டுதே!
மேற்குறித்த காரணங்கள் எதுவும் உங்களுக்கு திருப்திதரவில்லை என்றால் இந்த ஏழாம் காரணம் கட்டாயம் உங்களை திருப்தி படுத்தக்கூடும். குறித்த 6 காரணங்களை விடவும் இந்த காரணம் மிக பயங்கரமானது. உணர்வுகளோடு சம்பந்தமானது.
தப்பித்தவறி இந்த நோய் வந்து உங்களது தந்தையோ தாயோ மூத்தவாப்பாவோ அல்லது வேறு யாருமோ இறந்துவிட்டால் அவர்களது உடலுக்கு எந்தவிதமான இறுதிக்கிரியை களையும் செய்ய முடியாது. அதை பார்க்கவும் முடியாது. காட்டவும் முடியாது. இறந்தவர்களது உடல் சீல் வைக்கப்பட்ட பை ஒன்றில் போடப்பட்டு மரப்பெட்டியில் அடைக்கப்பட்டு அப்படியே புதைக்கப்படும். குல்லுன் கலாஸ்.
இது குறித்து நண்பர் Dr Aia Ziyad விரிவான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.👇 https://www.facebook.com/102520121333671/posts/125468255705524/
ஆக இப்படி ஒரு பேரவலம் நம்மை தாக்காமல் இருக்க நம்மை நாமே தற்காத்துக்கொள்ளவோம். நமது குடும்பத்தையும் உறவுகளையும் பாதுகாத்துக் கொள்வோம்.
*இந்த மொழி பெயர்ப்பிற்க்காக Rimzan Amanullahக்கு ஒரு 💐)

பிரார்த்தனை களுடன்தனிமை படுவோம் கைகளை கழுவும் வெற்றிபெறுவோம்.
Dr PM Arshath Ahamed
Dr PM Arshath Ahamed
குழந்தை நல மருத்துவர்.
#பிற்குறிப்பு: கொரோனா சாதாரண வைரஸ் போன்றதுதான். இதுக்கெல்லாம் இவ்வளவு முன்னெச்சரிக்கை தேவையில்லை. இது உலக நாடுகளின் சதி. அது இது என்பவர்கள் தான் இந்த தொற்று காட்டுத்தீ போல பரவி மூன்றாவது ஸ்டேஜை அடையும் போது போது முதன் முதலில் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் ஒளித்து கொள்பவர்களாக இருப்பார்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம். நாங்கள் களத்தில் இருந்து பேசுகிறோம். அவர்கள் கற்பனையில் பேசுகிறார்கள். வித்தியாசம் அவ்வளவுதான்.