Header Ads

Breaking News
recent

திருகோணமலை நகர சபை மற்றும் பிரதேச சபையின் வேண்டுகோள் !!



நாட்டில் ஏட்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கவனத்தில் கொண்டு திருகோணமலை நகர சபை மற்றும் பிரதேச சபைகள் இணைத்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க பல செயற்றிட்டங்களை செய்துக்கொண்டு இருக்கும் நிலையில்.

திருகோணமலை மாவட்டத்தின் நகரசபை மற்றும் ப.சூ பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு தற்போது நாட்டில் நிலவுகின்ற அசாதாரண நிலை காரணமாக அம் மக்களுக்கு குறைந்த விலையில் மரக்கறிகளை வினியோகம் செய்வதற்காக நகரசபை மற்றும் ப.சூ பிரதேச சபைகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று 28.03.2020 ஆம் திகதி அன்று நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

அதற்கு அமைய மக்கள் ஊரடங்கு சட்டம் தட்காலிகமாக நீக்கப்படும் சந்தர்ப்பத்தில் சந்தைகளிலும்,வீதிகளிலும் சனத்தொகை நெரிசலுக்கு மத்தில் சுகாதார வைத்திய ஆலோசனைக்கு முரணாக செயட்படுவதால்.

இவ் அசௌகரியத்தை தடுக்கும் முகமாக மரக்கறி வகைகளை மானிய அடிப்படையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் எமது வீடு  வரை கொண்டுவந்து சேர்க்கும் மாபெரும் சேவையை ஆரம்பம் செய்துள்ளதாகவும் மக்கள் தமது வீடுகளில் இருந்து இவ் கொரோனா வைரஸ் ஒழிப்பிட்க்கு முழு ஒத்துழைப்பு தருமாறும்.

நாளைய தினம் மக்கள் வெளியில் தேவையற்ற விதத்தில் அளைவதை   தவிர்ப்பதற்காகவும் மானிய விலையில் மரக்கறி,தேங்காய்,அரிசி என்பவற்றை வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் மாபெரும் சேவைகாக நகர சபை,பிரதேசபை தலைவர்கள் ,பிரதி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எடுத்துள்ள இவ் முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தருமாறு கேட்டுக்கொள்கின்றனர்.



இத்திட்டமானது இந்த அசாதரண நிலை முடியும்வரைத் தொடர்ச்சியான முறையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு
M.Mahzoom
Member of UC
077-6310646
Powered by Blogger.