Header Ads

Breaking News
recent

லிற்றோ கேஸ் நிறுவனம் விடுக்கும் அறிவிப்பு !

போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும், நாடுமுழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதேவேளை, விற்பனை முகவர்கள் எரிவாயு பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை லிற்றோ கேஸ் நிறுவனம் நுகர்வோர் பிரிவு ஒன்றினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மத்திய மாகாணம் மற்றும் மேல்மாகாணத்தில் விற்பனை முகவர்களுடன் 077 77 75658 என்ற இலக்கத்தின் ஊடாகவும் தென்மாகாண விற்பனை முகவர்கள் 076 34 88 452 எனும் இலக்கத்தினூடாகவும். தொடர்புக்கொள்ள முடியும்.

இதேவேளை, வட மாகாணத்தில் உள்ளவர்கள் 077 04 95 501 என்ற இலக்கத்திற்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் 077 37 05 631 எனும் இலக்கத்தின் ஊடாக அழைப்பினை ஏற்படுத்துவதன் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தொலைபேசி இலக்கங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள எமது MAX தமிழ் இணையத்திற்கு பிரவேசியுங்கள்.
Powered by Blogger.