விவசாய ஓய்வூதிய கொடுப்பனவு 5000 ரூபா வழங்க தீர்மானம் !!!

கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற விவசாய ஓய்வூதிய கொடுப்பனவு அனைத்து விவசாய ஓய்வூதிய பயனாளிகளுக்கும் ஏப்ரல் மாதத்தில் தலா 5000 ரூபா என்றடிப்படையில் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி இக்கொடுப்பனவை திருகோணமலை மாவட்ட பயனாளிகளும் எதிர்வரும் 6,7,8ம் திகதிகளில் உரிய தபால் நிலையம் மற்றும் உப தபால் நிலையத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.