திருகோணமலை பள்ளிவாயலில் ஒன்று கூடிய ஏழு பேரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை!!
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- ஜின்னா நகர் பள்ளிவாயலில் ஒன்று கூடிய ஏழு பேரையும் தனிமை படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற வேளையில் இன்று ஜும்மா தொழுகைக்காக ஒன்றுகூடிய ஏழு பேரையுமே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் பொலிஸ் பிணையில் விடுவித்து பின்னர் அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்குறிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 40க்கும் 60 ற்கும
மேற்பட்டவர்கள் எனவும் தெரியவருகின்றது.
நாட்டில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் சட்டங்களை மதித்து செயற்ப்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.