சமூர்த்தி பயனாளிகளுக்கான நிவாரண கொடுப்பணவு !!!

(ஹொரொவ்பொத்தான - N.M.நஸீம்)
சமூர்த்தி பயனாளிகளுக்கான நிவாரண கொடுப்பணவு இன்று 2020.04.07 வழங்கப்பட்டது
ஹொரொவ்பொத்தான பிரதேச பிரிவிட்கு உட்பட்ட ரத்மலை கிராமத்தின் சமூர்த்தி பயனாளிகளுக்கான நிவாரண கொடுப்பணவு இன்று கிராம சமூர்த்தி நிருவாகிகளின் ஊடாக வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது. மக்கள் ஒன்றுகூடலை தவிர்ப்பதற்கே இவ்வாறு ஒவ்வொரு வீடாக சென்று வழங்கப்பட்டன.
சமூர்த்தி பயனாளிகளுக்கான நிவாரண கொடுப்பணவு முதற்கட்டமாக ரூபா 5000 வழங்கி வைக்கப்பட்டது. சமூர்த்தி வங்கியினால் வழங்கப்படும் இந்நிவாரண பணத்தை இலகுவாக தமது இல்லத்திலே பெற்றுக்கொண்டமையிட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள் அரசுக்கும் இதில் ஈடுபட்ட நிருவாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

