Header Ads

Breaking News
recent

கிருமி தொற்று நீக்கி கொள்கலன்கள் வழங்கி வைப்பு!!!

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தவினால் கிருமி தொற்று நீக்கி விசிறும் இயந்திரங்கள் 10 இன்று திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரேமானந்திடம் கையளிக்கப்பட்டது.


A PAD சிறிலங்கா மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் நிதியுதவியில் பெறப்பட்ட இவ்வியந்திரங்கள் மூலம் கிருமித் தொற்று நீக்கி செயற்பாட்டை கிரமமாக மேற்கொள்ளக்கூடியதாக அமையும்.


இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம். ஏ.அனஸ்,மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்,கே.டி.நெரன்ஞன்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.