Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடல் எரிக்கப்பட்ட வேண்டும் சுற்று நிருபம் வெளியானது

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடல் எரிக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிட்டு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அணில் ஜெயசிங்க 01.04.2020எனும் திகதியிடப்பட்டு சுற்று நிருபம் வெளியாகியுள்ளது.

மேலும் நீர்கொழும்பில் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த நபரின் உடல் எரியூட்டப்பட்ட நிலையில் அது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் எதிர்பலைகள் உருவான நிலையில் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

கொரோனாவினால் உயிரிழப்போரை இக்கடிதம் மூலம் நான்கு வகையாக பிரித்துள்ளார்கள்.

01. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதென உறுதி செய்யப்பட்ட மரணம்

02. கொரோனாவினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்படும் மரணம்

03. கொரோனா தொற்று ஏற்பட்டமைக்கான சாத்தியமுள்ள மரணம்

04. கொரோனாவினால் மரணிப்பதற்கு சாத்தியம் குறைந்த நிமோணியாவினால் ஏற்பட்ட மரணம்

இந்த 04 வகை உயிரிழப்புகளில் எது இடம் பெற்றாலும் அந்த உடல்கள் எரியூட்டப்பட வேண்டும் என டாக்டர் அனில் ஜயசிங்க கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.