அனுமதிப்பத்திரத்தை சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை..!

சிலர் ஊரடங்குச் சட்ட நேர போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வீடுகளில் உள்ளோரை புதுவருட நிகழ்வுகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையிலேயே, அவற்றை அனுமதிக்க முடியாது எனவும் அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை அந்த வேலைகளுக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனுமதிப்பத்திரத்தை தமது சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோத மற்றும் தண்டனைக்குரிய செயற்பாடாகும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்