கரைத்தீவு முஸ்லிம் வித்தியாலயத்தின் வரலாற்றில் இடம்பிடித்த மாணவன் உஸாமா ஜஹான்!!
(புத்தளம் S. M. ஹிசாம)
நேற்று வெளியான O/L பெறுபேற்றில் கரைத்தீவு முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவன் உஸாமா ஜஹான் (ஜெஸீம் மௌலவியின் மகன்) பாடசாலையின் வரலாற்றில் முதல் 9A ஐ பெற்று சரித்திரம் படைத்துள்ளார்.
இம்முறை 52 மாணவர்கள் தோற்றி 32 பேர் உயர்தரம் கற்க தகைமை பெற்றுள்ளனர். இவர்களுள் 12 ஆண்களும் 20 பெண்பிள்ளைகளும் அடங்குவர். 12 பேர் விஞ்ஞானப் பிரிவில் கற்க தகைமை பெற்றுள்ளனர்.
சிங்களம், புவியியல், சித்திரம், தமிழ் இலக்கிய நயம், விவசாயம் ஆகிய பாடங்களில் 100 சதவீத மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். கணிதபாடத்தில் 04 பேர், தமிழ் 08 , விஞ்ஞானம் 01 , ஆங்கிலம் 01 , வரலாறு 02 , இஸ்லாம் 09 , சிங்களம் 17 , சித்திரம் 08 , தமிழ் இலக்கிய நயம் 06 , சுகாதாரம் 04 பேர் A தரம் பெற்றுள்ளனர். குறிப்பாக English பாடத்தில் 15 பேர் சித்திபெற்றுள்ளனர். அவற்றுள் 1A, 4C, 10S தரங்கள் பெறப்பட்டுள்ளது.
பாடசாலைக்கு நற்பெயர் பெற்றுத்தந்த மாணவர்களை வாழ்த்துவதோடு, பக்கபலமாய் நின்ற பெற்றோர்களுக்கு வித்தியாலய அதிபர் உட்பட ஆசியர்களும் நன்றி நவில்கின்றோம்.
