Header Ads

Breaking News
recent

சதுர மூலம் வினவப்பட்ட கேள்விக்கு சிறந்த தெளிவூட்டல் !!



(Askar Sahideen)
இன்றைய தினம்(06) தெரன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரமுகர்கள் #சதுர மூலம் வினவப்பட்ட கேள்விகளுக்கு மிகத் துல்லியமான முறையில் பதிலளித்ததை காணக் கிடைத்தது.

அதில் கலந்து கொண்ட மொளலவி #முர்சீத் அவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் நமது நாட்டு சட்டத்தையும் மார்க்க சட்டத்தையும் ஒப்பிட்டு தெளிவு படுத்தினார்.

அதேபோல ஜனாதிபதி சட்டத்தரணி #அலி சப்ரி தன்னுடைய சட்டத்தரணி பாணியில் கேள்விகளுக்கு விடை அளித்து சமகால பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளித்தார்.

அதேபோல் வக்பு சபை சார்பாக கலந்து கொண்ட பிரமுகர் வக்ப் சபை மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைகள் தொடர்பாகவும் அண்மைக் காலமாக ஊடகங்களில் அதிகமான பேசப்பட்ட #ஹோராபொத்தானை விவகாரம் தொடர்பாகவும் மிகச் சிறப்பாக விளக்கமளித்தார்.

Powered by Blogger.