Header Ads

Breaking News
recent

விபத்தில் ஒருவர் பலி !


(எஸ்.ரி.பிரணவன்)
முள்ளிவாய்க்காலில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர சம்பவம்! ஸ்தலத்திலேயே பலியான இளைஞன்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் இன்று அதிகாலை ஏற்பட்ட உழவு இயந்திர விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, அதிகாலை வயலுக்குச் சென்ற உழவு இயந்திரம் ஆனது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது.

முள்ளிவாய்க்கால் கிழக்கைச் சேர்ந்த நந்தகுமார் கிருபாகரன் (வயது-26) என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்தார்.

மேலும் இவ் விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.