Header Ads

Breaking News
recent

Max தமிழ் Media வின் உதவும் கரங்கள் செயல்திட்டத்தின் மூன்றாம் கட்ட நிவாரண பணி !!


(அப்துல்சலாம் யாசீம்)
Max தமிழ் Media வின் உதவும் கரங்கள் செயல்திட்டத்தின் மூன்றாம் கட்ட நிவாரண பணி இன்றைய தினம்(11) மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை - ரொட்டவெவ கிராமத்தில் வறுமையில் வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மெக்ஸ் தமிழ் ஊடக வலையமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் ஊடக செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் திறமைக்கான தேடல் எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊடக வலையமைப்பு சமூகச் ஏற்பாடுகளிலும் உதவிக்கரம் நீட்ட வேண்டுமெனும் நோக்குடன் Max தமிழ் Media வின் உதவும் கரங்கள் செயல்திட்டத்தின் நிதியிலிருந்து இது வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 


இதில் திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துல்சலாம் யாசீம் மற்றும் அலுவலக செய்தியாளர் M.M.முபசிர் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.

மேலும் இது போன்ற பல சமூக நல்லிணக்க செயற்படுகளை தொடர அனைவரினதும் துஆ வை எதிர்பார்த்தவர்களாகவும்  உங்கள் ஒத்துழைப்பும், அனுசரணைகளும் தொடர்ந்து எங்களுக்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஏனையவர்களும் எம்முடன் இனைய விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.



குழுமம்
தொடர்புகளுக்கு :
Max Tamil Media : 075-488 9999





இப்பதிவு மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும்,சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கா மட்டுமே....
Powered by Blogger.