Header Ads

Breaking News
recent

225 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 சந்தேக நபர்கள் கைது!!

றாகம வெலிசறை பகுதியில் 225 கிலோ கிராமிற்கும் அதிக ஹெரோயினுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும்  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று நள்ளிரவு இந்த சுற்றிவளைப்பு மேற்றக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய  அதி சொகுசு வாகனம் மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர், மேலும் அவர்களிடமிருந்து  225 கிலோவும் 969 கிராமும் அடங்கிய ஹெரோயின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட  போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 230 கோடி ரூபாவாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.,

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24,30,50 மற்றும் 55 வயது மதிக்கத்தக்க  வெலிசறை மற்றும் ஹோமகம பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சந்தேகநபர்கள் இன்றையதி்னம்  கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.
Powered by Blogger.