இராணுவ சிப்பாய் மீது கல் வீச்சு : சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிச்சூடு !
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் புலோலியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பசுபதி அனுசன் என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார்.
மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் அவரது கையில் கல்லடடிபட்டு படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் சுற்றிவளைப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்போது, இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மறித்துள்ளனர். எனினும் அதனை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன்துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய இளைஞன் அவசர உதவி அம்புலன்ஸ் சேவையில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் குருதிப் போக்கு உள்ள போதும் இளைஞன் பாதுகாப்பாக உள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை , கையில் படுகாயமடைந்த படைச்சிப்பாய், மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
