Header Ads

Breaking News
recent

5000ரூபா கொடுப்பனவில் மோசடி செய்தவரின் கடமை இடை நிறுத்தம்!!!


(அப்துல்சலாம் யாசீம்)
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000ரூபா கொடுப்பனவு பயனாளிகளுக்கு வழங்கும் செயற்பாட்டில் ஆறு நபர்களின் போலிப்பெயர்களை பட்டியலில் உட்படுத்தி மோசடி செய்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சேவை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இக்கிராம உத்தியோகத்தரின் மோசடி தொடர்பில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து ஆரம்ப விசாரணைக்காக மூவர் கொண்ட குழு அவரால் நியமிக்கப்பட்டது.இதில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன்,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன்,மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன் ஆகியோரடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரனை மற்றும் ஆரம்ப விசாரனை அறிக்கைக்கேற்ப குறித்த உத்தியோகத்தரின் சேவையை மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த நபர் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடைமறையின்போது அறவிடுகின்ற 30000ரூபாவை பிரதேச செயலகத்திற்கு வழங்காமல் மோசடி செய்தமை தொடர்பில் இவ்விசாரணையில் வெளிவந்நத்தாகவும் இது தொடர்பிலான பூரண அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றதும் உரிய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.