2021 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் குறித்த இறுதி தீர்மானம் விரைவில்
2021 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள மகளிர் ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான இறுதித்தீர்மானம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் எட்டப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது
2021 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு பெப்ரவ்ரி பாதம் 6 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இருப்பினும் சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை அடுத்து குறித்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் குறித்த தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை 2020 ஆம் ஆண்டுக்கான 20 இற்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
