Header Ads

Breaking News
recent

மேல்மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 389 பேர் கைது!!!

  




போதைப்பொருள்    மோசடியுடன்              தொடர்புடைய              குற்றச்சாட்டில் மேல்மாகாணத்தில்                   கடந்த 24 மணிநேரத்தில்                    389 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொம்பெனித்தெரு, கிராண்ட்பாஸ், களனி, முல்லேரியா மற்றும் றாகம ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் மோசடி, கஞ்சா போதைப்பொருள் மோசடி, சட்டவிரோதமான மதுபானம், மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் ஆகியவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் நேற்று நள்ளிரவு வரையிலான காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 221 பேரும், கஞ்சா போதைப் பொருளுடன் 224 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் 6 சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்ட விரோத மதுபானங்களுடன் 424 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது 4 ஆயிரத்து 580 லீற்றர் சட்ட விரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 480 சந்தேக நபர்களும், வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 800 சந்தேகநபர்களும், குறித்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.
Powered by Blogger.