திருகோணமலையில் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' 7வது வீடு கையாளிப்பு!!!!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் திருகோணமலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கப்பல்துறை கிராம சேவையாளர் பிரதேசத்திலுள்ள பயனாளிகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பபட்ட புதிய வீட்டினை கையாளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இப்புதிய வீடுகளுக்கான திறப்பு விழா நிகழ்வு திருகோணமலை பிரதேச செயலாளர் திரு.அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
இப்புதிய வீட்டு நிர்மாணம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ் ஆறு இலட்சம் ரூபா செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன்.
நிரந்தர வீடில்லாத வறுமைக்கோட்டின் கீழுள்ள, சமூர்த்தி பெறும் ஏழைக்குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்துக்கொடுக்கும் அரசின் இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வீடமைப்பு நிர்மாணத்திற்கான குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு அதிதியாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திருகோணமலை மாவட்ட முகாமையாளர் திரு.ஹேமகுமார, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர் என்.ராஜேந்திரன்,எஸ்.துஷாந்தன்,எஸ்.சாந்தகுமார்,அப்பிரதேச கிராம சேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பயனாளிக்குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







