Header Ads

Breaking News
recent

கட்டட நிர்மாணத் தொழிலாளி சடலமாக மீட்பு!!!!!

வவுனியா – கிடாச்சூரி பகுதியில் கட்டட நிர்மாணத் தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிடாச்சூரி பகுதியிலுள்ள வீடொன்றில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த அவர், வீட்டின் பின்புறத்தில் இருந்து நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Powered by Blogger.