Header Ads

Breaking News
recent

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கைதிகள் என்றும் மற்ற நபர் கந்தகாடு மத்தியநிலையத்தில் உள்ள தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 94 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 658 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.