தப்பியோடிய கொரொனா நோயாளியால் கொழும்பில் முக்கிய பகுதிகளில் பரபரப்பு!!!
இலங்கையில் அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளார்.
இந்நிலையிலேயே அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவரை மீண்டும் IDH மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
சந்தேகநபர் இன்று அதிகாலை 2 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் முதலில் கொழும்பின் முக்கிய பகுதியான கோட்டைக்கு சென்றுள்ளதாக மேல் மாகாண சிரேஸ் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோட்டை, பிரதான வீதியில் இருந்து முச்சக்கரவண்டி ஒன்றின் மூலமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவர் வந்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறான நிலையில் குறித்த நபர் பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
