Header Ads

Breaking News
recent

தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலமொன்று மீட்பு!!!!

(ஹொரவப்பொத்தானை    நசீம்) 
ஹொரவப்பொத்தானை  காட்டுப்பகுதியில் உருக்குலைந்து தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஹொரவப்பொத்தானை    - யானொயா ஆற்றிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கி, உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று (19) இனம்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் இவ் உடல் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேலான சிதைவடைந்த நிலையில் கிராம வாசிகள் தேன் எடுக்க காட்டுக்குள் சென்ற போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் பொலிஸாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை   பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.