பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அரையாண்டு கால சட்ட நடவடிக்கைகள்...

"இவ் அரையாண்டு காலப்பகுதியில் யாழ். மாவட்ட எல்லைக்குட்பட்ட நீதவான் நீதிமன்றங்களில் ஜனவரி மாதம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 102 வழக்குகளுக்கு ரூபா 497000 தண்டப்பணமாக கிடைக்கப்பெற்றது. பெப்ரவரி மாதம் 69 வழக்குகளுக்கு பதிவு செய்யப்பட்டு 78 வழக்குகளுக்கு தண்டப்பணமாக ரூபா 357000 கிடைக்கப்பெற்றது. மார்ச் மாதம் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 வழக்குகளுக்கு தண்டப்பணமாக ரூபா 164500 கிடைக்கப்பெற்றது. ஏப்ரல், மே மாதங்களில் கொவிட் 19 காரணமாக வழக்குகள் பதிவு செய்யப்படாததோடு, யூன் மாதம் 92 வழக்குகள்பதிவு செய்யப்பட்டு 84 வழக்குகளுக்கு தண்டப்பணமாக ரூபா 418000 கிடைக்கப்பெற்றது. மொத்தமாக அரையாண்டு காலப்பகுதியில் 318வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 307 வழக்குகள் நிறைவு பெற்று தண்டப்பணமாக ரூபா 1436500 கிடைக்கப்பெற்றது" எனவும் தெரிவித்துள்ளார்.
