வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முற்றாக முடங்கியது – மக்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கை!!!!
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரகனப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குடட்ட மீன் வியாபாரிகள் பதினொரு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, ஏனைய மக்களை பாதுகாக்க வேண்டியே இத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த பகுதியில் திறந்திருந்த வர்த்தக நிலையங்களை பாதுகாப்புப் படையினர் மூடியதுடன், அநாவசியமாக நடமாடும் பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
அத்தோடு, குறித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினர்களுக்கும் பாதுகாப்புப் படையினர்களுக்கும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பிரதேச பள்ளிவாசல்களில் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸார், இராணுவத்தினர்கள் கடமைகளில் ஈடுபற்று வருவதோடு வீதி ரோந்து நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.


