Header Ads

Breaking News
recent

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவன் படுகாயம்!!!!


(வவுனியா - தீபன்)
வவுனியா வைரவப் புளியங்குளம் பகுதியில் இன்று (24) காலை 10.30 மணியளவில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைரவர் கோவில் வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த லொறி வைரவர் கோவில் முதலாம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அப்பாதையுடாக வந்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதுண்டதுடன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகேயிருந்த மின்கம்பத்திலும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியான 22 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Powered by Blogger.